மன்னைப் புறங்கண்ட வாணன்தென்
மாறை வரையில்எங்கள்
பொன்னைக்கொணர்ந்துநும் கேள்முன்னர் நீபொன் புனைந்ததுவே.
எனவும் வரும்.
தஞ்சை 359
[ஆண் தகையே! பாண்டியனை முன்னமேயே சரணம் அடையாது
போரில் எதிர்த்த அரசனைத் தோற்றோடச்செய்த வாணன் தென்மாறை
மலையில்
எம் தலைவியை அழைத்துச் சென்று, நும் உறவினர் முன்னர், நீ
மணந்துகொண்ட செய்தியை நான் முன்னமேயே அறிந்து என்தாய்க்குக்
கூறி
விட்டேன்.]
இவற்றுள் நற்றாய் மணன் அயல்வேட்கையில் செவிலியை வினாதல்
ஆகிய
ஒன்றும் வினாதற்கும்,
வரைந்தமை பாங்கி செவிலிக்கு உணர்த்தலும், வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும், பாங்கி தான்அது முன்னே சாற்றியது
உரைத்தலும்,
ஆகிய மூன்றும் செப்பற்கும்,
தலைமகன் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்று என்றலாகிய ஒன்றும்
மேவுதற்கும் உரியவாம் என்றவாறு.
171
உடன்போய் வரைந்து
மீடற்கு உரியன
544 ஆதி ஒன்றுஒழித்து அல்லன
நான்கும்
மாதினை உடன்போய் வரைந்து மீடற்கும்
நீதியின் உரிய நினையுங் காலை.
இது மேல் கூறியவற்றுள் வரைந்து மீடற்கு உரியன இவை
என்கின்றது.
(இ-ள்) நற்றாய் மணன் அயர்வேட்கை ஒன்றும் ஒழித்து அல்லாத
நான்கும்
தலைமகன் புணர்ந்து உடன்போய்த் தலைமகளைத் தன் ஊரின்
வரைந்து
மீடற்கும் உரியவாம், ஆராயுங் காலத்து என்றவாறு.
172
78 |