ஒத்த நூற்பாக்கள்
முழுதும் --
ந. அ. 195
‘உரைத்தவற் றினுள் முதல் ஒழி்ந்த நான்கும்
வரைத்திரு மகளைமன் னவன்உடன் கொண்டுபோய்
வரைந்து மீள வருதற்கும் உரித்தே'
மா. அ. 93
172
ஒருபடி மீண்டு வரைதலின் விரி
545 இருவர் இல்லிற்கும் இயைந்தபன் னொன்றும்
ஒருவகை மீண்டு வரைதலின் விரியே
இது ஒருவகை மீண்டு வரைதலின் விரி இத்துணைத்து எனத்
தொகுத்து உணர்த்துகின்றது.
தலைவன் தம்மூர் சார்ந்தமை உணர்த்தல் முதலாகப் பாங்கி தான்
அது முன்னே சாற்றியது உரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட, அவள் மனை
வரைதற்கும் தன்மனை வரைதற்கும் உரிய
கிளவி பதினொன்றும்
உடன்போய் மீண்டு வரைந்துகோடலின் விரியாம் ஒருபடியாக என்றவாறு.]
ஒருபடி என்றது மேல் சூத்திரங்களுள் கவர்ச்சி நீங்குதற்கு
எனக்கொள்க.
173
விளக்கம்
1, தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல்.
2, தலைவி முன்செல்வோர் வாயிலாகத் தம் வரவைப் பாங்கியர்க்கு
உணர்த்தல்.
3, அவர் பாங்கியர்க்கு உணர்த்தல்.
4, பாங்கியர் நற்றாய்க்கு உணர்த்தல்.
5, நற்றாய் வேலனை வினாதல். (இ. வி. பொ. 168, 169)
6, நற்றாய் திருமணம்பற்றிச் செவிலியை வினவுதல். |