அகத்திணையியல்--நூற்பா எண் 173619

7

7,   செவிலிக்குத் தோழி வரைந்தமை கூறல்.


8,   வரைவு நிகழ்ந்துவிட்டதைச் செவிலி நற்றாய்க்குக் கூறல்.


9,   தாம் வரைந்த செய்தியைத் தலைவிதமர்க்கு இயம்புமாறு தலைவன்

    கூறல்.


10,  தோழி தான் அதனை முன்னரே அறிவித்தமை கூறல்.

இ. வி. 171

     ஆகிய பத்துமே இக்கிளவித்தொகையாம் ஆதலின் ‘பன்னொன்றும்'
என்ற பாடமும், கிளவி பதினொன்றும் என்ற உரையும் பொருந்துவஅல்ல.
 


‘இருவர் இல்லிற்கும் இயைந்திடு பத்தும்'

 

என்ற பாடமும், கிளவி ஒருபதும் என்ற உரையுமே ஏற்பன ஆதல் அறிக,

[சுன்னாகம் குமாரசாமிப்பிள்ளை பதிப்பு பக். 156]

      ஒருபடி--ஒருவகை; இது மீண்டு வரைதலின் ஒருவகைக்குரிய துறை
கூறுகின்றதாகும். இது ஒரு தனிப்பட்ட வகையாதலின் இதனை மேலைச்
சூத்திரங்களோடு இயைத்துக் காண்டல் கூடாது. இதுபற்றி மாறன்
அகப்பொருள் ஒன்றும் கூறாமையும் காண்க.
 

        முழுதும்--                                ந. அ. 196

173

உடன்போக்கு இடையீட்டு வகை


546    போக்குஅறி வுறுத்தல்1 வரவுஅறி வுறுத்தல்2
         நீக்கம்3 இரக்கமொடு மீட்சி4 என்றுஆங்கு
         உடன்போக்கு இடையீடு ஒருநான்கு வகைத்தே.


உடன்போக்கு இடையீடு கூறுவனவற்றுள் இஃது அதன்வகை இத்துணைத்து
என்கின்றது.