(இ-ள்) போக்கு அறிவுறுத்தல்
முதலாக மீட்சி ஈறாக நான்கு வகையினை உடைத்தாம் உடன்போக்கு இடையீடு என்றவாறு
174
விளக்கம்
1, தலைவிதான் தலைவனுடன் உடன்போதலைத் தோழியர் செவிலி
முதலியோருக்குச் சொல்லிவிடுத்தல்.
2, தன்தமர் தன்னை மீட்கத் தலைவனைப் பின்தொடர்ந்து வரும்
செய்தியைத்
தலைவி தலைவனுக்குக் கூறுதல்.
3, தலைவன் தலைவியை விடுத்து, ‘தலைவிதமருக்கு ஊறு செய்தல்
ஆகாது'
என்ற கருணைஉள்ளத்தான் மறைதல்.
4, தலைவி தலைவனைப் பிரிந்த இரக்கத்தோடு தமரைப் பின்
தொடர்ந்து
தன்ஊர் மீளல்.
உடன்போக்கு இடையீடு-தலைவி தலைவனுடன் போதற்கண் இடையே
அதற்கு ஊறு நிகழ்தல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 197
‘செலவுஅறி வுறுத்தல் வரவுஅறி வுறுத்தல்.
இடந்தனில் நீக்கம் இரக்கமொடு மீட்சிஎன்று
உடன்போக்கு இடையீடு ஒருநால் வகைத்தே.'
மா. அ. 94
174
உடன்போக்கு
இடையீட்டு விரி
547 நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன்செலவு உணர்த்தி விடுத்தலும்1 தன்செலவு
ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தலும்2 ஈன்றாட்கு
அந்தணர் மொழிதலும்3 அறத்தொடு நிற்றலின்
தமர்பின் சேறலைத் தலைவிகண்டு உரைத்தலும்4 |