6. தலைவியை அவள்தமர் மீட்டுச்
செல்கையில் அவள் திரும்பித்
திரும்பித்
தலைவனைப் பார்த்துக்கொண்டு அரற்றிக்கொண்டே
செல்லுதல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 198
‘இன்புறத் தலைமகள் இகுளையர் தமக்குத்
தன்செலவு உணர்த்தி விடுத்தலும் தகைசால்
நற்றாய்க்கு உணர்த்தி விடுத்தலும் நற்றாய்க்கு
அந்தணர் உணர்த்தலும் ஆயிழை நற்றாய்
அறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைச்
சிறப்புடைச் சேயிழை செம்மற்கு உணர்த்தலும்
தலைமகன் தலைமகள் தனைவிடுத்து அகறலும்
தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக்
கவன்றுஆற் றலும்எனக் கழறுமூ விரண்டும்
ஈண்டுஉடன் போக்கு இடை யீட்டு விரியே.'
மா. அ. 95
‘ஒன்றாத் தமரினும்
பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுரம் மருங்கின் அவள்தமர் எய்திக்
கடைக்கொண்டு பெயர்தலின் கலங்குஅஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கவ்வை உளப்பட
அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்.'....
தொல். பொ. 41
நீங்கும் கிழத்தி பாங்கியர்
தமக்குத் தன் செலவு
உணர்த்தி விடுத்தல்:
இன்னே இரங்கும்என் ஆயத் தவருக்கும் ஈன்றுஎடுத்த
அன்னே எனவரும் தன்ஐய ருக்கும்இவ் வாண்தகைதன்
பின்னே வளம்கெழு தண்ணறுங் கானகம் போகின்றவா
சொன்னேனுமக்கெமதுஊர்செல்லுவீர்இது சொல்லும்இன்றே.
அம்பி. 418
எனவும், |