[எம் ஊர் நோக்கிச் செல்லும்
சான்றோரே! என் பிரிவு நினைத்து
இரங்கும்
என் தோழியருக்கும், ‘அம்மா' என்று அழைத்துவரும் என்
அண்ணன்மாருக்கும் இத்தலைவன் பின்னே வளமான குளிர்ந்த
காட்டுவழியிலே யான் உடன்போக்கு நிகழ்த்துகின்றவாற்றை நீங்கள் சென்று
சொல்லுங்கள்]
தலைமகள் தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல்:
தீட்டச்சொல் லாமழு
வார்நெல்லை நாதர் சிலம்பில் கல்வி
நாட்டச்சொல்லீர் முல்லைப்பந்தர்க்குக்கால் நவ்விநாஉலராது
ஊட்டச்சொல்லீர் புனல்தேடும்என்பூவைஉறங்கத்தொட்டில்
ஆட்டச்சொல் லீர்அந் தணீர்பெற்ற பாவி அளவும்சென்றே.
நெல்லைக்கோவை. 48
எனவும்,
[இயற்கையாகவே கூரிதான மழுவை ஏந்திய நெல்லை நாதர்
மலையிலே,
கல்வியிலேயே நாட்டமுடைய சொற்களைக் கூறும் அந்தணரே!
என்னைப்
பெற்ற நல்வினையற்ற என்தாயிடம் சென்று, முல்லைப்பந்தருக்குக்
கால் நடும்படியும், மானுக்கு நாவறளாது நீர் ஊட்டும்படியும் என் பூவைப்
பறவை
உறங்குமளவும் அதன் தொட்டிலை ஆட்டும்படியும் யான்
வேண்டியதாகச்
சொல்வீராக.]
நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்:
அன்பே மருவி அருஞ்சிலை பூண்டகை ஆண்தகைபின்
நின்பேதை சென்றனள் நீள்நிழல் கான்இடை நீபுலம்புஉற்று
என்பே துறுவது இலங்குஇழை யாய்இங்ஙன் எய்தியமான்
தன்பே ரறிவுக்கு உயர்வட மீனும் தருவது அன்றே.
அம்பி. 419
எனவும்,
[அன்னையே! அன்பே பொருந்திக் கையில் வில்ஏந்திக்
தன்னைக்
காத்துவரும் தலைவன்பின் உன்மகள் சென்றுவிட் |