டாள். அவர்கள் சென்ற கானம்
நீண்ட நிழலை உடையது. நீ ஏன் வருந்தித்
தவிக்கின்றாய்? உன் மகள் பேரறிவுக்கு அருந்ததியும் நிகர் ஆகாள்.]
நற்றாய் அறத்தொடு நிற்றலின், தமர்பின் சேறலைத்
தலைவி கண்டு உரைத்தல்:
உவலைப்பதுக்கை முரம்புசெல் லாமல் உலகமங்கை
தவலைத் தவிர்த்த தமிழ்த்தஞ்சை வாணன் தரியலர்போம்
கவலைக் கடத்துச் சிலைத்திரை கோலிக் கடும்பகழித்
துவலைப் படைக்கடல் தோன்றல்பொற் றேர்வங்கம் சூழ்கின்றதே.
தஞ்சை 363
எனவும்,
[கற்குவியலும் மேடுமாய் வீணாகமல் பண்படுத்திப் பூமிதேவியின்
வருத்தத்தைப் போக்கிய வாணனுடைய பகைவர்கள் போகும் பிளவுபட்ட
வழிகளை உடைய காட்டில், வில்லாகிய அலைகோலி அம்பாகிய
திவலைகளை உடைய படையாகிய கடல், தலைவியை அழைத்துச் சென்ற
தலைவனுடைய அழகிய தேராகிய மரக்கலம் தன் இடைப்படுமாறு சுற்றிக்
கொள்கிறது.]
தமர் பின் சேறலை கண்டோர்
இரங்கல்:
இருகுன்று அனைய இளமுலை மானுடன்
ஏகும்இவன்
ஒருகுன்று எனநின்று உடலும்வெம் கூற்றம் அடல்குறித்து
வருகின்ற வான்தொடர் வேங்கையைப் போலும் மறவர்கெட்டேன்
அருகுஒன்ற நின்றுஇனி யார்தடுப் பார்என்று அறிகிலமே.
அம்பி. 423
எனவும்,
[தலைவியுடன் செல்லும் இத்தலைவன் ஒரு மலையைப் போல
எதிர்த்து
நின்று போராடும் எமனை ஒப்பான். இவனை எதிர்ப்பது கருதி
வருகின்ற கூட்டமான வேங்கையைப் |