போல வீரர்கள் வந்துள்ளனர்.
‘இருவருக்கும் அருகே போய் நின்று போர்
நிகழாமல் தடுக்கக் கூடியவர் யாவர் இருத்தல் கூடும்?' என்பது நமக்குப்
புலப்படவில்லையே.]
தலைவியைத் தலைவன் விடுத்து
அகறல்:
கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடில்என்கை
வடித்துஏர் இலங்குஎஃகின் வாய்க்குஉத வாமன்னும் அம்பலத்தோன்
அடித்தே ரலர்என்ன அஞ்சுவன் நின்ஐயர் என்னின் மன்னும்
கடித்தேர் குழல்மங்கை கண்டிடுஇவ் விண்தோய் கனவரையே.
திரு. 216
எனவும்,
[தலைவியே! மறவர்கூட்டமாகிய யானைகள் என்னை வந்து அணுகின்,
என்
அம்புக்கு எளிதில் இலக்காகி அழிந்து விடும். உன் தமையன்மார்
வரின்,
சிவபெருமானுடைய திருவடிக்கண் ஈடுபடாதவர்களைப் போல
அஞ்சுவேன்.
வானளாவிய இப்பெரிய மலையில் போரிட வருவார் யாவர்?
என்பதைக்
கண்டு சொல்.]
தமருடன் செல்பவள் அவன்புறம்
நோக்கிக்
கவன்று அரற்றல்:
ஏமான் என அஞ்சும் எற்காத்
தலின்அவ் இரவிபொன்தேர்
வாம்மானின் வாழ்வனவாகபன்னாள் தஞ்சைவாணன் ஒன்னார்
போம்மான் அதர்இடத்து என்னையர்தோன்றப்புறங்கொடுத்த
கோமான் மணிநெடுந் தேர்நுகம் பூண்ட குரகதமே.
தஞ்சை. 365
எனவும் வரும்.
[தஞ்சைவாணன் பகைவர் செல்லும் மான் அடிச் சுவட்டை உடைய
வழியிலே
என் தமையன்மார் வந்தாராக, அவருக்கு ஊறு செய்தல் கூடாது
என்ற
பெருந்தன்மையால்
79 |