புறம்கொடுத்து அகன்ற என்
தலைவனுடைய தேர் நுகத்தில் பூட்டிய
குதிரைகள், அம்புபட்ட மான் போல, தலைவனுக்கும் என்
தமையன்மாருக்கும் நேரக்கூடிய தீங்குபற்றி அஞ்சிய என்துயரத்தைப்
போக்கியதால். சூரியன் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைப் போல நீடு
வாழ்க.]
175
சான்றோரை முன்னிட்டு
வரைதல்
548 தன்ஊர் வரைதலும் தன்மனை வரைதலும்
என்னும்இவ் விரண்டுஒழித்து எவற்றினும் கிழவோன்
அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலம்
தந்தனன் வரைதல் தகுதி என்ப.
இஃது இவ்வகை வரைவு ஒழித்து எவ்வகை வரைவின் கண்ணும்
நிகழும் திறன் கூறுகின்றது.
(இ-ள்) உடன்போய்த் தன் ஊரின்கண்ணே வரைதலும் மீண்டுவந்து
தன்
மனையின்கண்ணே வரைதலும் ஆகிய இரண்டும் ஒழித்து அல்லாத
எல்லாவரைவின்கண்ணும் தலைமகன் அந்தணரையும் சான்றோரையும்
முன்னிட்டு அருங்கலம் கொடுத்து வரைதல் உலகியற்கை என்று சொல்லுவர்
புலவர் என்றவாறு.
இவ்வாறு வரைந்துகொணடுழிக்
கண்டோர்
மகிழ்ந்து கூறல்:
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏர்அணி கண்ணுத லோன்கடல் தில்லை அன்ன
வார்அண வும்முலை மன்றல்என்று ஏங்கும் மணமுரசே.
திரு. 296
எனவரும். |