[திருமாலுக்கும் பிரமனுக்கும்
ஆதிகாரணனாய நெற்றிக் கண்ணனுடைய
கடலை அடுத்த தில்லைஅன தலைவியின் திருமணத்தின்போது
பூரணகும்பங்கள் வைக்கப்பட, தோரணங்கள் தொங்கவிடப்பட,
வாத்தியங்கள்
ஒலிக்கப்பட மணமுரசம் முழங்கப்படும்.]
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் --
ந. அ. 199
‘கண்டுவந்து எதிர்கொளல் களித்தனராய்த் தமர்
கொண்டுஅகம் புகுதல் குழீஇய கொள்கையர்
கொடுப்பக் கோடலின் குறித்ததுஓர்
மூன்றும்
வடுத்தவிர் வனவாம் வரைந்துகொள்
வகையே.'
மா. அ. 81
‘குலன்எதிர் கோடல் கொண்டுஅகம்
புகுதல்
கலன்அணிந் தனராய்க் கோலம் காண்டல்
கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல்
மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல்
வடமீன் கண்டுமண அறைபுக வாழ்த்தல்
அருமறைச் சடங்கிற்கு அமைத்த தருப்பையை
மருமலர்த் தாரோன் மனத்துஉற நகுதல்
ஆங்குஅதை இறைவிக்கு அவன்தெளித்து உரைத்தல்
பாங்குஉடைப் பாங்கிகை யடைபணிப் பதனொடு
மன்பார் புகழ்தர வரைந்துகோ டலின்விரி
ஒன்பான் ஆகும் உணர்ந்துணர்த் துகிலே.'
மா. அ. 82
மணஞ்சிறப்பு உரைத்தல் என்ற
தலைப்பில் திருக்கோவையாரும்
முத்துவீரியமும் கூறுவன, இந்நூலிலும் நம்பியகப் பொருளிலும்
இல்வாழ்க்கையின் விரியாய் உள்ளமை குறித்து உணரத்தக்கது.
176 |