கற்பியற் செய்தி
---
கற்பின் பொது
இலக்கணம்
549 பொற்புஅமை சிறப்பின் கற்புஎனப் படுவது
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
பிரிவும் பிறவும் மருவிய தாகும்.
இது நிறுத்தமுறையானே களவு என்னும் கைகோள் உணர்த்தி
வரைவின்
வழித்தாகிய கற்பு உணர்த்துவான் புகுந்தவற்றுள், இஃது அதன்
பொதுஇலக்கணம் உணர்த்துகின்றது.
(இ-ள்) பொலிவு அமைந்த சிறப்பினை உடைய கற்பு என்று
சொல்லப்படுவது
உள்ள மகிழ்ச்சியும் ஊடலும் ஊடல் உணர்த்தலும் பிரிவும்
பிறவும்
பொருந்தியதாகும் என்றவாறு.
பிரமம் முதலியனவும் கற்பு ஆதல் ஒக்குமேனும், கந்தருவம் போல
ஒத்த
அன்புடையர் ஆதல் ஒருதலைஅன்மையின் அவை கைக்கிளை
பெருந்திணைப்பாற்படுதலின், அவை போலாது, சிறந்த அளவு இல்
இன்பத்து
ஐந்திணை மருங்கின் கற்பு என்பார், ‘பொற்புஅமை சிறப்பின்
கற்பு
எனப்படுவது' என்றார்.
அஃதாவது, ‘கொண்டானின் சிறந்ததெய்வம் இன்று' எனவும்
‘அவனை இன்னவாறே வழிபடுக' எனவும் இருமுது குரவரானும், அந்தணர்
திறத்தும்
சான்றோர் தேத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும்
ஒழுக்கம்
தலைவனும் கற்பித்தவாறு ஒழுகுதலாம். இனித்தலைமகனும்,
களவின்-கண்
ஓரையும் நாளும் தீது என்றதனைத் துறந்து ஒழுகினாற்- |