போல ஒழுகாது, ஓத்தினும் கரணத்தினும் யாத்த சிறப்பு இலக்கணங்களைக்
கற்பித்துக்கொண்டு, துறவறத்தில் செல்லும் துணையும் இல்லறம் நிகழ்த்தலும்
ஆம். ‘பிற' என்றதனால், பிரிந்துழிவரும் விகற்பம் எல்லாம் கொள்ளப்படும்.
177
விளக்கம்
நிறுத்தமுறை -- ‘அளவுஇல்
இன்பத்து ஐந்திணை'
இ. வி. பொ. 24
என்ற நூற்பா.
பிரமம் முதலிய நான்கும் தொடக்கத்தில் பொருந்தாக் காமமாக
இருந்து, பின்
பொருந்தும் காமம் ஆகியன.
அசுரம் முதலிய மூன்றும் முன்னர் ஒருதலைக்காமமாக இருந்து பின்
அன்புடைக்காமம் ஆகியன. தொடக்கம் முதல் அன்புடைக்காமம் ஆயினது
கந்தருவ ஒழுக்கத்தோடு ஒருபுடையான் ஒத்த ஐந்திணைக்காமம் ஆதலின்,
ஐந்திணைமருங்கின் கற்பே சிறந்தது என்பது.
அந்தணர்--நீத்தார்; சான்றோர்--கல்வி அறிவு ஒழுக்கங்களான்
அமைந்தார்;
ஐயர் -- தலைவர்களாகிய அரசன் உவாத்தியான் தாய்தந்தை
தம்முன்
முதலாயினோர்; அமரர்-தேவர்.
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை.
தொல். பொ. 135
ஆதலின், தலைவன் களவுஒழுக்கத்தில் ஓரையும் நாளும் பாரான் என்பது.
இங்குக் குறிக்கப்பட்டுள்ள் கற்புப்பற்றிய விளக்கம் நச்சினார்க்கினியர்
தொல்காப்பியப் பொருட்படலம் 142 ஆம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ள
செய்தியேயாம். |