630இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

      முழுதும்--                      ந. அ. 200, மு வீ. கற். 1


      ‘மறைவெளிப் படுதலும் தமரின் பெறுதலும்
      இவைமுத லாகிய இயல்நெறி திரியாது
      மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
      பிரிவொடு புணர்ந்தது கற்புஎனப்படுமே.'

தொ. பொ. 499

     ‘கற்புஎனப் படுவது கற்பினை வழுவாது
     தற்கொண் டானையும் தன்னையும் பேணி
     இல்லறத்து ஒழுகும் இல்லறக் கிழத்தி
     நல்லறத் தவர்மதி நன்மாண் பதனொடும்
     மகிழ்ச்சியும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
     இகழ்ச்சியில் பிரிவுடன் பிறவும் இயன்ற
     புகழ்ச்சியின் எய்திஇல் பொருந்துவது ஆகும்.'

மா. அ. 97
177

கற்பின் கிளவித் தொகை


550  இல்வாழ்க் கையே பரத்தையின் பிரிவே
     ஓதல் பிரிவே காவல் பிரிவே
     தூதில் பிரிவே துணைவயின் பிரிவே
     பொருள்வயின் பிரிவுஎனப் பொருந்திய ஏழும்
     வளம்மலி கற்பின் கிளவித் தொகையே.


     
இது கற்பு என்னும் கைகோளின் கிளவித்தொகை இத்துணைத்து
என்கின்றது.

      (இ-ற்) இல்வாழ்க்கை முதலாகப் பொருள்வயின் பிரிதல் ஈறாகச்
சொல்லப்பட்ட ஏழும் கற்பு என்னும் கைகோளின் கிளவித் தொகையாம்
என்றவாறு.

178