அகத்திணையியல்--நூற்பா எண் 178633

படச

 படச்செல்லும்; இடையன பத்து நாழிகையும் அருத்தத்தொடு படச் செல்லும்.
கடையன பத்து நாழிகையும் காமத்தொடு படச்செல்லும். ஆதலான்,
முதற்கண் பத்து நாழிகை அறத்தொடு படச் செல்லும் தலைமகன்,
தலைமகளும் வேண்டவே, தானும் வேண்டிப் போந்து அத்தாணி புகுந்து
அறம் கேட்பதும் அறத்தொடு படச்சொல்லுவதும் செய்யும்; நாழிகை
அளந்துகொண்டு இடையன பத்து நாழிகையும் இறையும் முறையும்
கேட்டுஅருத்தத்தினொடு பட்டனவே செய்து வாழ்வானாம்; அவ்அருத்தத்து
நீக்கத்துக் கடையன பத்துநாழிகையில் தலைமகள்உழைப் போதரும். போதர,
அப்போதரவு பார்த்திருந்த பரத்தையர், குழல்ஊதி, யாழ்எழீஇத் தண்ணுமை
இயக்கி முழவு இயம்பித் தலைமகனை இங்குக் கூத்து உண்டு என்று
அறிவிப்ப. என்னை?

        ‘குழல் எழீஇ யாழ்எழீஇத் தண்ணுமைப் பின்னர்
        முழுவு இயம்ப லாமந் திரிகை.'


என்று கூத்து நூலுடையாரும் சொன்னார் என்பது.

       அவ்வகை அறிவிக்கப்பட்ட தலைமகன் ‘நாம் இதனை ஒரு கால்
நோக்கிப் போதும்' என்று செல்லும். சென்றக்கால், அவர்கள் தம்கண்
தாழ்விப்பர் என்பது. அஃதேஎனின் இவன் பரத்தையரைத் தலைமகளை
எய்திஇருந்தே உடையன் ஆதல் எய்தாததன்முன் உடையன் ஆதல்
இரண்டு அல்லது இல்லை; அவற்றுள், எய்திஇருந்தே உடையன்
ஆயினானே எனின், ‘தலைமகள் குணமேயும் அன்றிப் பிறவும் இன்பம்
செய்வன உளவாகக் கருதினானாம். ஆகவே,

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   
                        குறள். 1101