640இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இல

இல்வாழ்க்கையின் விரி


552    தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்1
       தலைவனைப் பாங்கி வாழ்த்தலும்2 தலைவியை
       வரையும்நாள் அளவும் வருந்தாது இருந்தமை
       உரையாய் என்றலும்3 பெருமகள் உரைத்தலும்4
       தலைவனைப் பாங்கி வரையும்நாள் அளவும்
       நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்5
       மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை
       அன்புற உணர்த்தலும்6 வாழ்க்கைநன்று அறைதலும்7
       மணமனைச் சென்று வந்த செவிலி
       பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தலும்8
       நன்மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தலும்9
       அன்னவர் காதல் அறிவித் தலும்10 என
       இன்னவை பத்தும்இல் வாழ்க்கை விரியே.

     இஃது இல்வாழ்க்கை விரி இத்துணைத்து என்கின்றது.

     (இ.ள்) தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதலாக
அன்னவர் காதல் அறிவித்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தும் இல்வாழ்க்கை
விரியாம் என்றவாறு.
 

விளக்கம்
 

1      ‘உன் உதவியால் அன்றோ நான் இவளை அடைந்தேன்!’ என்று
       பாங்கியைத் தலைவியின்முன் தலைவன் புகழ்தல்.


2      தலைவியை மணந்து நலம் செய்தமை குறித்துத் தலைவனைப்   

       பாங்கி வாழ்த்துதல்.


3      தன் திருமணநாள் வரும்வரை அவள் வருந்தாது இருந்ததன்
       காரணத்தைத் தோழி வினாவுதல்.


4      ‘தலைவனது கருணை எனக்கு இன்பத்தையே அளித்து  

       வந்தமையால் வருந்தாது இருந்தேன்’ என்று தலைவி பாங்கிக்கு  

       கூறுதல்.