அகத்திணையியல்--நூற்பா எண் 180643

 நுனிநின்றருந்தியதுஒக்கும்என்றேமின்நுடங்குஇடையாள்
துனிநின்ற நாணம் தடுக்கநின் னோடு தொடுத்தஅன்பே.

அம்பி. 436


எனவரும்.

      [குளிர்ந்த சோலையில் பலாமரக் கிளைகளிலே ஆண் குரங்குகள்
பாய்ந்து கூத்தாடுவதால் கனிகள் காம்பு நீண்டு தொங்கும் பலவாகிய
மலைநாடனே! மின்னலைப்போல அசையும் இடையினை உடைய தலைவி

காமத்துன்பம் நின்று நாணத்தைத் தடுக்க உன்னோடு கொண்ட அன்பு,

கரும்பை நுனியிலிருந்து அடிநோக்கித் தின்பதைப்போல, முன்
உப்புக்கறித்துப் பின் தொடர்ந்த தித்திப்பை நல்குவதாயிற்று.]


தலைவனைப் பாங்கி வாழ்த்தல்:


தேற்றிய வஞ்சினம் பொய்யா வகைநின் திருப்புயத்தில்
ஏற்றிய தொங்கல் இவள்குழற்கு ஏற்றி இலங்குஇழையார்
தூற்றிய போல வரும்தொலை யாஎன்கண் சோர்புனலும்
மாற்றிய எம்பெரு மான்வாழி வளம்சிறந்தே.

அம்பி. 434

எனவும்,

      [நீ தெளிவித்த சூளுறவு தவறாதபடி காத்து உன் மார்பில் நீ சூடிய
மாலையை இவள் கூந்தலில் முடித்து, ஊர்மகளிர் தூற்றும் அலர்போல என்
கண்களிலிருந்து இடை விடாது வந்த கண்ணீரையும் போக்கி, எனக்குச்
சிறப்புத் தந்த எம்பெருமான்! நீ நாளும் வளம் சிறந்து வாழ்க.]
 

வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை
பாங்கி தலைவியை வினாதல் :
 

தினைக்காவல் மாறி மலைக்கும்வெம் போர்வெஞ் சிலைக்குறவர்
மனைக்கா வலில்தனி வைகிய நாளும் வரைவுஇடைவைத்து