644இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

உனைக்கா தலர்விட்டு உறைந்தஅந் நாளும் ஒளித்ததுஎங்கே
சுனைக்காவிஅன்னகண்ணாய்தொலையாநலம்துய்க்கும்அன்பே.

அம்பி. 439


எனவும்
,

      [காவிக்கண்ணாய்! பகலிலே தினைப்புனத்தைக் காக்கும் காவல்

நீங்கிக் குறவர்மனையில் இற்செறிக்கப்பட்டு நீ தனியே வைகிய நாள்களிலும்,
தலைவன் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிந்த
அந்நாள்களிலும்,உன் குறையாத நலத்தைத் தலைவன் துய்க்கும் அன்பு
உனக்கு எங்கே சென்று ஒளித்தது?.]

      தலைமகள் வருந்தாது இருந்ததற்குக் காரணம் கூறல்:


பாங்காய இன்பப் பணிமொழி யாய்இப் பரிசுநெஞ்சில்
தாங்கா வருநலம் தாங்கஅரி தோதலை நாள்அளித்த
பூங்காவி உண்டு புரவலர் தாம்வந்து இரவுபகல்
நீங்காத நெஞ்சம்உண்டு என்தஞ்ச மாகிய நீயும்உண்டே.

அம்பி. 440


எனவும்
,

     [எனக்குத் துணையாகிய இன்பம்தரும் இனியமொழியை உடைய
தோழியே! இவ்வாறு மனம் தாங்கமுடியாமல் வரும் தலைவன் அன்பினைப்
பிரிவிடத்துத் தாங்குதல் அரிதோ? தலைவன் முதல்நாள் அளித்த
கருங்குவளைப் பூவும், தலைவன் இரவுபகல் வந்து என்பால்
இடம்கொண்டதால் அவனை நீங்காத மனமும், எனக்குப் பற்றுக்கோடாகிய
நீயும் வருந்தாது காத்தலை அறிக.]
 

பாங்கி தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற
ஆற்றிய நிலைமை வினாதல் :


முருகுஅவி ழும்குழல் மோந்துஅவள் ஏந்து முலைபுளகித்து
உருக முயங்கி மயங்கியும் நீர்உல வாதஇன்பம்
பெருகுவது அன்றி அலம்பிற வாபின்னை யான்நுமக்குஇங்கு
அருகிய நாள்என்செய் தீஐய னேஇந்த அன்புகொண்டே.

அம்பி. 438

எனவும்,