[தாயே! நின்மகள்
பால்உணவும் ஊன்அடிசிலும் இனிய
பொரிக்கறியும் இனிய
புளிக்குழம்பும், குறையாத அன்பினோடு சமைத்துப்
பாற்கடலில்இருந்து
எடுத்த அமுதத்தைப் போலத் தன் அன்பனாகிய
தலைவன் உண்ணப்
படைத்து, அதுகண்டு மனம் மகிழும் சிறப்பினள்.]
மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி
கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தல்:
அருந்தும் பசியும் அடுமணல் சோறும் அயர்த்து இறைவன்
வருந்தும் பசிக்கு வருந்துமில் வாழ்க்கையும் வேட்கையுடன்
பொருந்தும் விருந்தும் புறந்தரு நீர்மையும் போற்றிஅவன்
திருந்தும் திறம்செய லும்கற்ற வாநின் திருமகளே.
அம்பி. 446
எனவும் வரும்.
[உன் அழகியபெண் தான் உண்ணவேண்டும்என்று கருதும்
பசிஉணர்ச்சியையும் மணல்சோறு அடும் விளையாட்டையும் விடுத்துக்
கணவன் வருந்தும் பசியைத் தீர்க்கச் சமைக்கும் இல்வாழ்க்கையையும்,
விருப்பத்தோடு பொருந்தும் விருந்து புறந்தருதலையும், தலைவன் விரும்பும்
செய்கைகளையே தான் செய்யும் செயலையும் எவ்வாறு இவ்வளவு விரைவில்
கற்றுவிட்டாள் என்பது வியப்பாகஉள்ளது.!]
ஒன்றென முடித்தலால், கற்புப்பயந்த அற்புதம்
உரைத்தலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப்
பொன்பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்புஅந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும்
இல்பந்தி வாய்அன்றி வைகல்செல் லாதுஅவன் ஈர்ங்களிறே.
திரு. 305
எனவரும். |