[சிற்பங்கள் திகழும் மதிலை
உடைய சிற்றம்பலத்தில்
எழுந்தருளியிருக்கும் செக்கர் சடையானுடைய பூவணம் என்ற ஊரை ஒத்த
இயற்கை வனப்புடைய தலைவியின் கற்பு அருந்ததியின் கற்பையும்
விஞ்சியது நாட்டை விட்டுப்பிரிந்துபோயினும்,
தலைவன் ஊரும் களிறு,
மாலையில் தன் வீட்டுக் கட்டுத்தறியில் அன்றி வேற்றிடத்தில் நின்று
தங்காது.]
செவிலி நற்றாய்க்கு நன்மனை வாழ்க்கை உணர்த்தல்;
தொண்டுஇனம்மேவும்சுடர்க்கழலோன்தில்லைத்தொன்னகரில்
கண்டஇல்நம் மேவும்இல் நீ அவள் நின்கொழு நன்செழுமென்
தண்டுஇனம்மேவுதிண்தோளவன்யான் அவள் தற்பணிவோள்
வண்டுஇன மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்வயலே.
திரு. 302
எனவும்,
[அடியார் கூட்டம் தன்னைச் சூழ்ந்திருக்கும் திருவடிகளை உடைய
சிவபெருமானுடைய தில்லைநகரில்
யான் கண்ட தலைவியது வீடு நாம்
இருக்கும் வீட்டை ஒக்கும்; அவள் உன்னை ஒக்கும்; தலைவன்
நின்
கணவனை ஒப்பான்; தோழி என்னை ஒத்துக் காணப்படுகிறாள்; வண்டு
தங்கும் கூந்தலாளாகிய
தலைவியின் அயல்வீட்டார் நம் அயல்வீட்டாரைப்
போல அன்புடன் பழகி வருகின்றனர்.]
செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தல்:
மன்னவன் தெம்முனை மேல்செல்லும் ஆயினும் மால்அரிஏறு
அன்னவன் தேர்புறத்து அல்கல்செல் லாது வரகுணனாம்
தென்னவன்ஏத்துசிற்றம்பலத்தான்மற்றைத்தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவல்அன் னாளும்மற் றோர்தெய்வம் முன்ன லளே.
திரு. 306
எனவும் வரும். |