[அரசனுடைய ஆணையால் தலைவன்
போர்முனைக்குச் செல்லும்
நிலை
ஏற்பட்டாலும். தலைவனுடைய தேர் தன்நிலையின்கண் அன்றி
வெளிஇடத்துத் தங்காது. வரகுணனாகிய பாண்டியன் வழிபடும்
சிற்றம்பலத்தானாகிய, மற்ற தேவர்களுக் கெல்லாம் முற்பட்ட
சிவபெருமானின் மூவல் என்ற ஊரை ஒத்த இயற்கை வனப்புடைய
தலைவியும் தலைவனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தையும் தெய்வமாகக்
கருதாள்.]
இவற்றுள், தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலாகிய ஒன்றும்
கிழவோன் மகிழ்ச்சிக்கும், தலைவனைப் பாங்கி வாழ்த்தல் முதலாகச்
செவிலிக்கு வாழ்க்கை நன்று அறைதல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறனுள்
பெருமகள் உரைத்தல் ஆகிய ஒன்றும் கிழத்தி மகிழ்ச்சிக்கும், மற்றவை
பாங்கி மகிழ்ச்சிக்கும், செவிலி நற்றாய்க்குத் தலைமகள் கற்பியல் உணர்த்தல்
முதலாகிய மூன்றும் செவிலி மகிழ்ச்சிக்கும் உரியவாம்.]
180
பரத்தையின்
பிரிவின் வகை
553 வாயில் வேண்டல்1 வாயில் மறுத்தல்2
வாயில்நேர் வித்தல்3 வாயில் நேர்தல்4 என்று
ஆய பரத்தையின் அகற்சிநால் வகைத்தே.
(இ-ள்) வாயில் வேண்டல் முதலாக வாயில் நேர்தல் ஈறாக நான்கு
வகையினை உடைத்தாம் பரத்தையிற்பிரிவு என்றவாறு.
181
விளக்கம்
1 பரத்தையின் பிரிந்து வந்த தலைவன் தலைவியை அடைவதற்கு
வாய்ப்பினை வேண்டுதல்.
2 தலைவன் விருப்பிற்கு இணங்குதற்குத் தலைவி மறுத்தல்.
3 தோழி முதலிய தூதுவர்கள், தலைவியிடம் தலைவன் |