அகத்திணையியல்--நூற்பா எண் 181649

செயல

   செயல்பற்றி வெகுளாது அமைதியுறுமாறு ஏதுக்கள் பலகாட்டி, அவள்
   உடன்பட முயலுதல்.

4  வாயிலோர் வேண்டியாங்குத் தலைவி வெகுளி நீங்கித் தன்  

   இல்லத்திற்குத் தலைவன் வருதற்கு இசைதல்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

        முழுதும்--                                      ந. அ. 204


   ‘வாயில் வேண்டல் மறுத்தல்நேர் வித்தல்
   நேயம் அதனொடு நேர்தல்என்று உரவோன்
   ஆய்ந்துஉரை பரத்தையின் அகற்சிநால் வகைத்தே.'


மா. அ. 101
181

உணர்த்த உணரும் ஊடலின் விரி


554    காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
       ஏதுஈ தாம்இவ் விறைவிக்கு என்றலும்1
       தனித்துழி இறைவி துனித்துஅழுது இரங்கலும்2
       ஈங்குஇது என்எனப் பாங்கி வினாதலும்3
       இறைமகன் புறத்துஒழுக்கு இறைமகள் உணர்த்தலும்4
       தலைவியைப் பாங்கி கழறலும்5 தலைவி
       செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
       அவ்வணி உழையர்கண்டு அழுங்கக் கூறலும்6
       பரத்தையர் கண்டு பழித்தலும்7 பரத்தையர்
       உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன்
       வரவுகண்டு உவந்து வாயில்கள் மொழிதலும்8
       வரவுஉணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்9
       முதிரா மென்முலை எதிர்கொண்டு பணிதலும்10
       புணர்ச்சியின் மகிழ்வும்11 என்று உரைத்தபன் னொன்றும்
       உணர்த்த உணரும் ஊடற்கு உரிய.

82