ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 205
‘காந்தன் பரத்தையின் பிரிந்துழிக் கண்டோர்
ஏந்திழை ஊடற்கு ஏதுஇஃது என்றலும்
புலம்புஅற இருந்தவள் புலம்பி இரங்கலும்
இலங்கிழைப் பாங்கிஈது என்என வினாதலும்
அண்ணல்புறத் தொழுக்கு ஒண்ணுதல் உணர்த்தலும்
பண் அமர் மொழிச்சியைப் பாங்கி கழறலும்
திருந்துஇழை செவ்வணி அணிந்துசே டியைவிட
அருந்தமர் உழையர்கண்டு அழுங்கிக் கூறலும்
பண்புஇகழ் பரத்தையர் கண்டு பழித்தலும்
நண்பனை உலகியல் நாடி விடுத்தபின்
மன்னவன் வரவினை வாயிலோர் மொழிதலும்
மென்னகைக்கு அதனை இகுளை விளம்பலும்
இணர்புரி குழலாள் எதிர்கொண்டு பணிதலும்
புணர்ச்சியின்மகிழ்வும்என்றுஉணர்த்துபன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய.'
மா. அ. 102
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம்
இவ்விறைவிக்கு என்றல்:
பங்கே ருகத்தண் பழனநல் லூரன் பவனிவரக்
கொங்குஏய் நறுங்குழல் கோதையர் கண்டு குவித்தகையும்
அங்கே அவர்அவர் அன்புக்கு அருள்செய்து அமைத்தகையும்
பொங்குஏர் இளமுலை யாள்புல வாவகை போவது அன்றே.
அம்பி. 447
எனவும்,
[தாமரை பூக்கும் குளங்களைஉடைய ஊரன் உலாப் போதர,
நறுமணம்
பொருந்திய கூந்தலைஉடைய பரத்தையர் கண்டு கைகுவிப்பத்
தலைவன்
அங்கு அவர்மாட்டு அருள் செய்து செய்த செயல்கள் தலைவிக்கு
புலவியை உண்டாக்காமல் போகா.] |