அகத்திணையியல்--நூற்பா எண் 182653

தன

  தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கற்குச் செய்யுள்:

அப்புஉற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவர உள்ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துஉயிர்ப்பு உற்றுத்தம் மெல்அணை யேதுணையாச்
செப்புஉற்றகொங்கையர்யாவர்கொல்ஆர் உயிர்தேய்பவரே.

திரு. 354


எனவும் வரும்.

     [கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமானுடைய தில்லையை
உறாதவர் அடையும் நோய் போன்று, தலைவன் அழகைக்

கொள்ளைகொண்டு பிரிந்ததனால் உள்ளும் புறமும் சூடுற்று
பெருமூச்சுசெறிந்து தம் தலையணையே துணையாக உயிர்
தேய்த்துகொண்டிருக்கும் இளையார்கள் என்போல் பிறர் உளரோ.]

      ஒன்றென முடித்தலால், கனவில் கண்டு இரங்கலும், செஞ்சுடர்க்கு
உரைத்ததூஉம், வாரம் பகர்ந்ததூஉம், அடிசில் அமைத்த மடவரல்
இரங்கலும், தலைவன் பிரிந்தமைக்கு இரங்கலும், வரவும்பெறும்.
 

கனவில் கண்டு இரங்கல்:
 

தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
ஆஆ கனவும் இழந்தேன் நனவுஎன்று அமளியின்மேல்
பூஆர் அகலம்வந்து ஊரன் தரப்புலப் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேன்அரும் பாவியனே.


திரு. 355

எனவும்,


      [பாவாய்! தேவரும் அசுரரும் வணங்கும் திருவடியை உடைய
சிவபெருமானின் தில்லையைச் சேராதவர்போல, ஐயோ! கனவினையும்
இழந்துவிட்டேன். படுக்கையிலே தலைவன் தன்மார்பினை யான்

தழுவுதற்குக் கொடுக்கப் புலவி