அடிசில் அமைத்த மடவரல்
இரங்கல்:
அலைஏற் றியஇப்பி வைத்துஅடுப் பாக அரும்புஅவிழ்தேன்
உலைஏற் றியசங்கின் நித்திலம் பெய்துஅனல் ஒண்துகிரால்
கலைஏற் றியநுதல் நாம்அடும் சோறுஇடக் கைக்கமலத்து
இலைஏற்ற வெம்பசி இன்றுஇல்லை யோநம் இறையவர்க்கே.
அம்பி. 449
எனவும்,
[பிறைநுதலாய்! அலைகள் கரை சேர்த்த இப்பியை அடுப்பாக
அடுக்கித்
தேனை உலையாகச் சங்காகிய பாத்திரத்தில் பெய்து முத்தாகிய
அரிசியை
இட்டுப் பவளமாகிய விறகை வைத்து நாம் அட்ட சோற்றை
இடத் தன்
தாமரை போன்ற கைகளையே இலையாகக் கொண்டு அன்று
ஏற்ற காலத்துத்
தலைவனுக்கு இருந்த விரும்பத்தக்க பசி இன்று
இல்லைபோலும்.]
தலைவன் பிரிந்தமைக்கு
இரங்கல்:
காவும் பருமணல் கானலும்
போய்அருங் கங்குலினும்
வாவும் பரிநெடுந் தேர்வரக் காண்கிலம் வாவிதொறும்
மேவும் கருங்கயல் செங்கழு நீரின் மிசைப்பிறழப்
பூவும் புலவும் கமழ்புனல் ஊரன் புகற்சிநன்றே.
அம்பி. 450
எனவும் வரும்.
[சோலைகளுக்கும், பெரியமணலைஉடைய கடற்கரைச்
சோலைகளுக்கும்
இரவிலும் செல்லும் தலைவன் தேர் நம் இல்லத்திற்கு
வருதலைக்
காண்கிலோம். ஓடைகளில் கயல்மீன்கள் செங்கழுநீர்ப்
பூக்களின்மேல்
பிறழுதலால் பூக்களும் புலவுநாறும் புனல் ஊரனாகிய
தலைவனுடைய
விருப்பம் நம்மாட்டு நன்றாய் இருக்கிறது!] |