656இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஈங

ஈங்கு இதுஎன் எனப் பாங்கி வினாதல்:



எம்மா திரமும் புரவலர்த் தேடி இரந்து உழல்வோர்
தம்மா துயரம் தவிர்த்து அருள் வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
நம்ஆவி அன்னவர் நாள்தொறும் நாள்தொறும் நல்கவும்நீ
விம்மா வருந்துவது ஏன்பிரிந் தாரின் விளங்குஇழையே.

தஞ்சை. 379

எனவும்,

     [எல்லாத் திசைகளிலும் தம்மைக் காப்பவரைத்தேடித் தடுமாறும்
இரவலருடைய பெருந்துயரத்தைப்போக்கி அருள் செய்யும் வாணனுடைய
தமிழ்த்தஞ்சையில் வாழும் நம் உயிர்போன்ற தலைவன் நாள்தோறும்
உனக்குத் தலையளி செய்யவும் மனம்நொந்து, தம்தலைவரைப் பிரிந்த
தலைவியர் போல, விளங்கிழையா ளாகிய நீ வருந்துவது எதற்காக?]
 

இறைமகன் புறத்து ஒழுக்கு இறைமகள் இயம்பல்:
 

தார் ஆகம் நல்கினர் காரிகை யாய்தஞ்சை வாணன்தன்னைச்
சேரா தவர்எனத் தீவினை யேன்நையச் செங்கண்வன்கண்
காரான் கழனிக் கரும்புஇனம் சாயக் கதழ்ந்துசெந்நெல்
ஆராது அயலின்பஞ் சாய்ஆரும் ஊரன் அயலவர்க்கே.


தஞ்சை. 380

எனவும்,

     [தோழியே! சிவந்த கண்களையும் தறுகண்மையையும் உடைய எருமை

வயலிலே கரும்புகள் சாய விரைந்து சென்று செந்நெல்பயிரை உண்ணாது

பக்கத்திலுள்ள பஞ்சாய்க்கோரையை உண்ணும் தலைவனுக்கு,
தஞ்சைவாணனை நண்பராகச் சேராதவர்களைப் போலத் தீவினையை

உடைய நான் வருந்தும்படி பரத்தையர் தம் மார்பைத் தழுவுதற்கு நல்கினர்.]
 

தலைவியைப் பாங்கி இகழ்தல்:


மாலைக் குமுத மலர்தரும் தேன்உண்ட வண்டுவரக்
காலைக் கமலம் குவிந்தது வோஅருங் கற்பினுக்கும்