ஏலக் கருங்குழல் மங்கையர்
காதலர் என்செயினும்
சீலத்து இயல்புகுன் றார்வருந் தேல்மெய் திருந்துஇழையே.
அம்பி.453
எனவும் வரும்.
[திருந்துஇழைத் தலைவியே! மாலையிலே மலர்ந்த குமுதப்பூவில்
தேனைஉண்ட வண்டு, காலையில் தன்னிடத்துத் தேன்நுகர வரும்போது,
தாமரை குவிந்து தேன் கொடுக்க மறுக்கின்றதா ? மங்கையர் கற்பினால்,
காதலர் என்ன செய்தாலும் தம் நல்லொழுக்க இயல்பு மாறார்; ஆதலின்
தலைவன் செயல்குறித்து வருந்தாதே]
செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர் கண்டு
அழுங்கக் கூறலும் எனவே, செவ்வணி
அணிந்து சேடியை விடுவாய்
என்றலும், விடுத்தலும் வரப்பெறும்.
செவ்வணி அணிந்து சேடியை விடுவாய் என்றல்:
பருதி நிறத்துப் பணித்துகில்
ஆர்த்துப் பணைமுலைமேல்
குருதி நிறத்துகிர் குங்குமம் சேர்த்திஇக் கோலம்கொண்டு
கருதிய கற்புக் கடன்நெறி கூறிநம் காதலர்க்கு
வருதி எனப்பகர்ந் தேவிடு சேடியை வாணுதலே.
அம்பி. 454
எனவும்,
[‘தோழி! செக்கர்ஞாயிறு போன்ற ஆடையை உடுக்கச் செய்து
மார்பில்
செங்குங்குமம் பூசிக்கொள்ளச் செய்து இச்செவ்வணியோடு மகளிர்
கற்புக்கடனாகிய முறையைக் குறிப்பால் பரத்தை இல்லில் இருக்கும் நம்
தலைவனுக்குத் தெரிவித்து வருவாய்' என்று தோழி ஒருத்தியிடம் சொல்லி
அவளை அனுப்புவாயாக.] |