செவ்வணி அணிந்து சேடியை
விடுத்தல்:
அரத்தம் உடீஇ அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூட்டிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீஒழியல் என்று
மனைநோக்கி மானை விடும்.
திணைமாலை. 144
எனவும் வரும்.
[செந்நிற ஆடை உடுத்தி, செஞ்சாந்து பூசி, பொறுப்போடு
செங்கழுநீ்ர்ப்
பூவைச் சூட்டி,
‘பரத்தை உன்னை நோக்கி ஏதேனும் இகழ்ந்து
கூறினும் நீ
தலைவனைக் காணாது வாராதே' என்று தலைவன் தங்கிஇருந்த
பரத்தைமனையை நோக்கிச் சேடி ஒருத்தியை அனுப்புவாள்.]
அவ்வணி உழையர்கண்டு அழுங்கக் கூறல்:
வேளாண் மரபு விளக்கிய வாணன்மின் னார்கழல்சூழ்
தாளான் வளம்கெழு தஞ்சை அன் னீர்சங்கம் தந்தநன்னீர்த்
தோளா மணிஅன்ன தொல்குல ஓடையில் தோன்றியபூ
வாளா அலர்தொடுப் பார்க்குஎங் ஙனேவந்து வாய்த்ததுவே.
தஞ்சை. 382
எனவும்,
[வேளாண் மரபினை விளக்கும் வாணன் என்ற பெயருடைய கழல்
சூழ்ந்த
திருவடிகளை உடையவனுடைய வளம் பொருந்திய தஞ்சையை
ஒத்தவரே!
சங்கிலிருந்து தோன்றிய துளையிடாத முத்துப்போன்ற மேதக்க
குலமாகிய
ஓடையில் தோன்றிய பூ, வீணாக அலர் தொடுப்பவருக்கு
எவ்வாறு வந்து
கிடைத்ததோ ?- தலைவியின் உயர் குடிப்பிறப்புக்
கூறியவாறு.]
பரத்தையர் கண்டு பழித்தல்:
தண்ணந் துறைவன் மனைஉறை பாவை தகுதிசொல்லின்
பண்ஒன் றியமொழி யீர்வசை யேபனி வார்குவளைக் |