அகத்திணையியல்--நூற்பா எண் 182659

கண்ணும் குழலும் கருகித் துகிலும் கனதனமும்
வண்ணம் சிவந்து வெளுத்தது நாணும் மடமையுமே.

அம்பி. 456

எனவும்,

      [பண்போன்ற இனிய சொல்லீர்! பனி வாரும் குவளை போன்ற
கண்ணும் கூந்தலும் கருகி, ஆடையும் நகில்களும் சிவந்து, நாணும்
மடமைப்பண்பும் வெளுத்து வாழும், துறைவனுடைய தலைவியின் தகுதியைப்
பற்றிப் பேசுதல் இழிந்த செய்தியாம்.]
 

வரவுக்கண்டு உவந்து வாயில்கள் மொழிதல்:
 

வில்லைப் பொலிநுதல் வேல்பொலி கண்ணி மெலிவுஅறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்தும்
தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலம்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவயல் ஊரன்மெய் யேதக்க வாய்மையனே.

திரு. 368

எனவும்,

      [வில்போன்ற நுதலையும் வேல்போன்ற கண்களையும் உடைய
தலைவியின் மெலிவை உணர்ந்து விரைவாக அவள் மாட்டுத் தலைவன்
வந்துசேர்ந்தான் ஆதலின், தேவர் வாழ்த்தும் சிவபெருமானுடைய
சிற்றம்பலத்தை மனத்து நினைப்பவரைப்போல, வளமானவயல் ஊரனாகிய
தலைவன் உண்மையில் சொன்ன வாய்மைவழி நிற்பவன் ஆவன்.]
 

தலைமகன் வரவு பாங்கி தலைவிக்கு உணர்த்தல்:


புறத்தாறு ஒழுகி வரினும்இப் போது புகைஉயிர்த்தல்
அறத்தாறும் அன்பும் அருளும்அன் றே அன்பர் தேர்கடவி
மறத்தாரை வாள்விழி யாய்திரு மாளிகை வாசல்வந்துஉன்
திறத்து ஆர்வம்உற்று நின்றார் எதிர்கோடல்சிறப்பு உடைத்தே.

 

அம்பி. 457

எனவும்,