[கண்ணீர் உகுக்கும் கொடிய
வாள்போன்ற கூரிய விழியாய்!
தலைவன்
புறத்தொழுக்கம்கொண்டு வரினும், இப்பொழுது வெப்பமாக
மூச்சுவிட்டு
வெகுளியைத் தோற்றுவித்தல், அறமும் அன்பும் அருளும்
ஆகாது,
தலைவன் தன்தேரைச் செலுத்திக்கொண்டு நம்வீட்டு வாசற்கு வந்து
உன்னிடத்தில் விருப்பத்தோடு
நிற்கின்றான். அவனை எதிர்கொண்டு
அழைத்து வரவேற்றலே உனக்கு சிறப்புடைத்தாகும்.]
தலைவனைத் தலைவி எதிர்கொண்டு
பணிதல்:
மருவில் பெருநலம் மன்னுவ தாம்தஞ்சை
வாணன்வெற்பர்
ஒருவில் பசலை உருக்குவ தாம்எமக்கு ஊடல்எவ்வாறு
இருவில் புருவ இளங்கொடி யேஎய்தும் எய்தல்இல்லாத்
திருவில் புனைநறுந் தார்வரை மார்பர் திருமுன்நின்றே
தஞ்சை. 386
எனவும் வரும்.
[தஞ்சைவாணன் வெற்பனாகிய நம் தலைவன், நம்மைக் கூடி
இருப்பின் நமக்குப் பேரின்பம் ஏற்படுகிறது. நம்மை அவன் விட்டு நீங்கின்
நம்மைப்
பசலை உருக்குகிறது. இருவில் போன்ற புருவங்களை உடைய
தோழியே!
வானவில் போலப் பல நிற மலர்களால் புனையப்பட்ட மலை
போன்ற
மார்பினை உடைய தலைவன்முன்நின்று நமக்கு ஊடுதல் என்பது
எவ்வாறு
இயலுவதாம்.?]
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. --
(குறள் 1287)
இதுவும் அது.
[தண்ணீர் இழுத்துச்செல்லும் என்பதை அறிந்தும் தண்ணீரில்
பாய்பவர்
செயல்போல, புலவி முடிவுபோகாது என்பதை அறிந்தும்
தலைவனோடு
புலந்து பெறும்பயன்யாது?] |