அகத்திணையியல்--நூற்பா எண் 182,183661

புணர

புணர்ச்சியின் மகிழ்தல்:


உள்ளத்து உவகை ஒருதலைப் பட்ட இருதலைப்பைம்
புள்ஒத்து இனிய புதுமலர்க் காவில் புணர்ந்தஇன்ப
வெள்ளக் கடலிடை வீழ்ந்துஉடன் நீந்துவர் மெய்மறந்து
வள்ளக் கமல வளவயல் ஊரனும் மாதருமே.

அம்பி. 460

எனவரும்.

      [வள்ளம்போலக் காணப்படும் தாமரை பூக்கும் வளம் சான்ற வயல்

ஊரனும் மாதரும், மனத்திலே மகிழ்ச்சி ஒரே நிலையதாக அமைந்த,
இருதலையையும் ஓர் உடலையும்உடைய பறவையை நிகர்ப்ப, இனிய
புதுமலர்க்காவில் புணர்ச்சியாகிய இன்பவெள்ளம் நிறைந்த கடலிடை வீழ்ந்து
மெய்மறந்து அவ்வெள்ளத்தை உடன் நீந்துவர்.]

182


உணர்த்த உணரா ஊடலின் விரி


555    வெள்ளணி அணிந்து விடுப்புழிப் புள்ளணி
       மாலைவேல் அண்ணல் வாயில் வேண்டலும்1
       தலைவிநெய் ஆடியது இகுளை சாற்றலும்2
       தலைவன் தன்மனத்து உவகை கூர்தலும்3
       தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றலும்4
       தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்5
       பாணன் முதலாப் பாங்கன் ஈறாப்
       பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
       மறுத்தலும்6 விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டு
       இறையோன் மகிழ்தலும்7 இறைமகள் விருந்துகண்டு
       ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
       சீறேல்என்று அவள் சீறடி தொழலும்8 இஃது
       எங்கையர் காணின் நன்றுஅன்று என்றலும்9
       அங்குஅவர் யாரையும் அறியேன் என்றலும்10
       காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்11
       தாமக் குழலியைப் பாங்கி தணித்தலும்12