6 தலைவி, பாணன் - விறலி
- பாங்கி முதலிய வாயில்களை மறுத்தல்.
7 தலைவன் தான் விருந்தினருடன் வந்ததைக் கண்டு தலைவி
ஊடலின்றித் தன் தவற்றைப் பொறுத்துக்
கொண்டமை கருதி மகிழ்தல்.
விருந்தினரைக் கண்டதும் மறைந்த ஊடல், பள்ளியிடத்துச்
சேர்ந்தவழித் 8 8 8 தலைவிக்கு
வெளிப்பட்டமை கண்டு, தலைமகன்
வருந்திக் ‘கோபம் கொள்ளாதே' என்று அவள் அடியில்
விழுதல்.
9 ‘நீ என் அடிக்கண் பணிதலைப் பரத்தையர் கண்டால், உனக்குத்
தீங்கை விளைவிப்பர்'
என்று தலைவிகூறுதல்.
10 ‘நீ குறிக்கும் பரத்தையர் ஒருவரையும் இதுகாறும் அறிந்திலேன்' என்று
தலைவன் கூறுதல்.
11 ‘உம்முடைய காமக்கிழத்தியை யான்கண்டு அறிந்தேன்' என்று தலைவி
தலைமகனுக்குக் கூறுதல்.
12 தலைவியின் ஊடலைப் பாங்கி நீக்க முயலுதல்.
13 தலைவி ஊடல் தணியாளாகத் தலைமகன் மனம் வெகுளுதல்.
14 பாங்கி தலைவனை அன்பற்றவன், கொடியவன் என்று இகழ்ந்து
கூறுதல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 206
‘மென்னகை வெள்ளணி அணிந்து விடுத்துழி
மன்னவன் வந்து வாயில் வேண்டலும்
மைந்தனை ஈன்று மடந்தைநெய் ஆடலைத் |