தந்திரப் பாங்கி தலைவற்கு
உணர்த்தலும்
உரவோன் தன்மனத்து உவகைகூ ர்தலும் அவன்
வரவுஉணர்ந்து இகுளை வாள்நுதற்கு உணர்த்தலும்
தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாண்மகன் முதலாப் பாங்கன் ஈறா
ஆண்மகன் விடுத்த வாயில்அவள் மறுத்தலும்
பாணன் வரவினைப் பாங்கி பழித்தலும்
பாண்மகன்அவ்வழிப் பணிந்து வெறுத்தலும்
புதுவிருந்தொடும்வரப்பொறுத்தல்கண்டு இறைமகன்
மதிபெற வியந்து வாழ்த்துபு மகிழ்தலும்
களித்தவன் விருந்தொடும் கடிமனை அகத்துஉற
ஒளித்த ஊடல் வெளிப்படு காலை
மின்னிடை அமளியில் வென்னிட மெலிதலும்
பொன்னடி பணிந்தவன் பொறுத்திஎன்று ஏத்தலும்
எங்கையர் காணின்நன்று அன்றுஇஃது என்றலின்
அங்குஅவன் பிறர்தமை அறியேன் என்றலும்
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்
ஏமுறப் பாங்கி இறைவியைத் தணித்தலும்
தணியா ளாகத் தலைமகன் ஊடலும்
அன்பனைப் பாங்கி அன்புஇலை கொடியைஎன்று
இன்புறக் கூறலும் இன்னன பிறவும்
உணர்த்த உணரா ஊடற்கு உரிய.'
மா. அ. 103]
வெள்ளணி அணிந்து
விடுப்புழிப் புள்அணி மாலை வேல்
அண்ணல் வாயில் வேண்டல்:
என்பால் குறையை நினைந்து மறாதுஎதிர் கொள்ளவல்லே
தன்பால் புலவி தணிசென்று நீதஞ்சை வாணன்வையம்
அன்பால் பரவும் புகழுடை யான்அரு ளேஅனையாய்
உன்பால் புலவி உறாள்வண்ண வார்குழல் ஒண்ணுதலே.
தஞ்சை. 388
எனவும், |