[தஞ்சைவாணன் ஆகிய, உலகத்தவர்
அன்பால் போற்றும் புகழ்
உடையவனின் அருளே அனைய தோழி ! என்னிடம் ஏற்பட்ட குறையை
நினைத்து மறுக்காமல், என்னை எதிர்ஏற்றுக் கொள்வதற்கு நீ தலைவிபால்
சென்று அவள் ஊடலைத் தணிப்பாயாக. தலைவி உன்னிடத்தில் கோபம்
கொள்ளமாட்டாள்.]
தலைவி நெய்யாடியது இகுளை
சாற்றல்:
கையார் வரிவளைக் காரிகை நீயும் கடும்பரியும்
மையார் விழிவிலை மங்கையர் இல்லம் மறந்துவந்தது
எய்யாது இருந்திலள் அய்யா அருமணி ஈன்றுஎடுத்த
மெய்ஆ றவும்விர வும்துனி ஆறவும் வேண்டும்இன்றே.
அம்பி. 464
எனவும்,
[ஐயா! கையில் வளையல் அணிந்துள்ள தலைவி, நீயும் நின்
குதிரையும்
விலைமங்கையர் வீட்டை மறந்து இங்கு வந்துள்ள செய்தியைத்
தான்
அறியாமல் இருக்கவில்லை. நல்ல முத்துப் போன்ற புதல்வனை
ஈன்றுஎடுத்த
உடல் வருத்தம் நீங்கவும் அவள் வெறுப்பு நீங்கவும்
வேண்டும்.]
தலைவன் தன்மனத்து உவகை
கூர்தல்:
செய்யும் தவம்உடையேன்சென்றுகாண்குவதுஎன்றுசெவ்வி
மைஉண் குவளை மடம்கெழு நோக்கும் மனம்மகிழ்வும்
கையும் குழவியும் தீம்பால் எறிக்கும் கனதனமும்
நெய்யும் பசந்து நிலவுஎழு மேனியும் நீர்மையுமே.
அம்பி. 465
எனவும்,
[என் தலைவியின் மைஉண்ட குவளைமலர் போன்ற
மடநோக்கினையும்
மனமகிழச்சியையும், குழந்தையை ஏந்திய
84 |