666இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

கைகளையும், பால் பரவியுள்ள தனங்களையும் நெய்யாடிப் பசந்து ஒளி

வீசும் உடம்பையும் குணங்களையும் முற்பிறப்பில் நற்றவம் புரிந்த நான்

என்று வந்து காண்பேன்?]


தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றல்:


மருஆர் குழலி வருந்திய மெய்யும் மகவும்கையும்
பருவார் முனிந்த பயோதர பாரமும் பச்சுடம்பும்
ஒருவாத உள்ளத்து உவகையும் காணநம் ஊரர்நின்பொன்
திருவாசல் வந்துநின் றார்அறி யேன்நின் திருவுளமே.

அம்பி. 466

எனவும்,

      [நறுமணம் கமழும் கூந்தலை உடையாய்! உன் வருந்திய உடல்,

கையில் ஏந்தியுள்ள குழந்தை, கச்சினைக்கடந்து பரந்த நகில்கள்,
ஈன்றணிமை உடைய உடல், நீ்ங்காத மனமகிழ்ச்சி இவற்றைக் காண்பதற்கு
நம் தலைவன் உன் இல்லத்து வாசலில் வந்து நிற்கின்றான். உன்
உள்ளக்கருத்தையான் அறியேன்.]
 

தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தல்:
 

ஆம்பால்விரவினது அன்பால்அறிந்துஅயில் அன்னம் அன்னீர்
போம்பால் அனையசொல் பூவையர் சேரியில் புல்லிஇங்ஙன்
யாம்பாலனைக் கொண்டு இனிவைகல் போக்கு தும்எம்முலையின்
தீம்பால் படில்அவர் செய்குறி மார்பில் சிதையும் அன்றே.

அம்பி. 471

எனவும்,

     [நீரோடு விரவிய பாலினைப் பகுத்து அறிந்துஉண்ணும் அன்னத்தை

ஒப்பீர்! வெளிப்படும் பால்போன்ற இன்சொல் பரத்தையர் சேரியில்

அவரைப் புல்லி இங்குவந்து எம்நகிலின் தீம்பால் படின், தலைவன் மார்பில்
பரத்தையர் செய்துள்ள குறிகள் சிதைந்துவிடும். ஆதலின் அவர்கள் புலத்