தலும் கூடும்; எனவே தலைவன்
இங்கு வருதல் வேண்டா. யாங்கள்
குழந்தையைக்கொண்டே இனிப் பொழுது
போக்கிக்கொள்வோம்.]
பாணன் முதலாகப் பாங்கன்
ஈறாகப் பேணிய வாயில்கள்
பெரியோன் விடுத்துழித் தலைமகள் மறுத்தலுள்,
பாணற்கு மறுத்துரை:
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்கு ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர்என்பதுஎன்விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொற் சேரியில் விற்றுஎம்மில் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கல்உற்றோபுலை ஆத்தின்னிபோந்ததுவே.
திரு. 386
எனவும் வரும்.
[மாடு தின்னும் புலையனே! நீ கூரிய ஊசியைக் கொல்லன் சேரியில்
விற்பவன். ‘நீலகண்டராகிய சிவபெருமானின் தில்லைநகர்த் தலைவன்
உன்னிடம் மெய்யான அன்பினன்; நீங்காத அருளினன்' என்று எங்களிடம்
பலதிறப்பட்ட பொய் மொழிகளைப் பேசுதற்கோ இங்கு வந்துள்ளாய்!]
‘பிற' என்றதனால், வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறலும்
தலைமகள் பாணனைச் சொல்லலும்
வரப்பெறும்.
வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல்:
கொல்ஆண்டு இலங்குமழுப்படையோன் குளிர்தில்லை அன்னாய்
வில்ஆண்டு இலங்கும் புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக்
கல்ஆண்டு எடேல்கருங் கண்சிவப்பு ஆற்று கறுப்பது அன்று
பல்லாண்டு அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே.
திரு. 387
எனவும்,
[கொலைத் தொழில் செய்யும் மழுவாளியின் தில்லையை ஒப்பாய்!
வில்லை ஒத்த புருவங்கள் வளையச் சிவந்த வாய் |