துடிப்ப என் மீது எறிவதற்குக்
கற்களை எடுத்தல் வேண்டா. கரிய
கண்களில்
தோன்றியுள்ள கோபத்தை நீக்கிக்கொள்; மெல்லிய மொழியினை
உடைய நீ
தலைவன் வாயில் மறுப்பது அழகு அன்று; உன்னைப்
பல்லாண்டு வாழுமாறு
வாழ்த்தி உன்னைச் சுற்றி வந்து வணங்குகிறேன்.]
தலைமகள் பாணனை மறுத்தல்:
வண்புனல்ஊர்வையைசூழ்தஞ்சைவாணனை
வாழ்த்தலர்போல்
கண்புனல் ஊரும்நின் காதல்கண் டேன்என் கடைத்தலைக்கே
தண்புனல் ஊரன்வந் தான்என்று சாற்றினை தாளம்உறாப்
பண்புனல் ஊர்கள்எல் லாம்பாடி ஏற்கின்ற பாண்மகனே.
தஞ்சை. 395
எனவும் வரும்.
[வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தாதவர்களைப் போலக்
கண்ணீர்
உகுக்கும் உன் அன்பு எனக்கு நன்றாகத் தெரியும். தாளத்திற்குப்
பொருந்தாத பண்களை வளமான ஊர்களில் எல்லாம் பாடிப் பிச்சை ஏற்கும்
பாணனே! என் வீட்டுவாசலுக்குத் தலைவன் வந்துள்ளான் என்று எத்தகைய
பொய்ச் சொற்களைக் கூறுகின்றாய்?]
விறலி வாயில் மறுத்தல்:
அயிலும் கயலும் அனையகண்
அஞ்சனம் மாற்றிவஞ்சத்
துயிலும் துடைத்த அன்றேசெவிதூர்ந்தது சோர்ந்ததுஉள்ளம்
மயிலின் புறத்து முருகனைப் போல வருமகிழ்நன்
பயிலும் பரத்தையர் பாடியில் பாடுஇனி பாடினியே.
அம்பி. 487
எனவும்,
[பாடினியே! மயில்மீது இவர்ந்து வரு முருகனைப் போலத் தலைவன்
பரத்தையர் சேரியில் பயிலத்தொடங்கின அன்றே, அயிலும் கயலும்போன்ற
என் கண்கள் அஞ் |