சனத்தை மறந்து உறக்கத்தை
நீத்தன. நீ அங்குப் பாடிய பாடல்கள்
என்செவிகளைத் தூர்த்தன. இனி, நீ பரத்தையர்
இருப்பிடத்திலேயே சென்று
பாடு.]
கூத்தர் வாயில் மறை:
வடிக்கண் ணியரொடும் வந்தனை நீவந் தனைசெயல்உன்
நடிக்கும் பழைய நடத்தில்ஒன் றோஇந் நடிமறவார்
அடிக்கண் அதிர்கழல் வீரிய நாமங்கொள் ஆரியஇப்
படிக்கண் நகர்முழு தும்பாடி ஆடும் பரத்தையரே.
அம்பி. 488
எனவும்,
[வீரர்களாய் வீரக்கழல் அணிந்த வீரர்களின் பெருமையை ஒத்த
பெருமைஉடைய ஆரியக்கூத்தனே! இவ்வுலகில் நகர்முழுதும்
பாடி ஆடும் பரத்தையர் குழாத்தோடு நீ இங்குவந்து என்னை
வந்தனைசெய்வது ஆகிய இந்நடிப்பு
உன்பழைய நடனங்களில்
ஒன்றுபோலும்!]
பாங்கி வாயில் மறை:
உடைமணி கட்டிச் சிறுதேர்
உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகை அன்னார்கள்முன்னம்
கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே.
திரு. 385
எனவும்,
[பிரமனும் திருமாலும் காணமுடியாதவராய் விடை ஏறிய
நீலகண்டரின்
தில்லையை ஒத்த மகளிர் முன்னே, முத்த வெண்ணகைத்
தோழீ!
மணிகட்டித் தேர்உருட்டித் தெருவில் நடக்கும் நம் புதல்வன்
பிறந்தபின்னர்,
இன்றே நம் தலைவன் நம் வீட்டை அணுகியுள்ளான்.] |