விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்
கண்டு
தலைமகன் மகிழ்தல்:
கருந்துன்று வார்குழல் கன்னிஇல் வாழ்க்கையும் கையும்செவ்வாய்
முருந்துஒன்று மூரல் முறுவலும் காண முகம்அறியா
விருந்துஒன்று வேறுஒன்றின் மீளா அருந்துனி மீட்கநல்ல
மருந்துஒன்றுஉவந்து இங்ஙனேமனமேவந்துவாய்த்ததுவே.
அம்பி. 492
எனவும் வரும்.
[மனமே! கரிய குழலியாகிய தலைவியின் குறைவற்ற இல்வாழ்க்கைச்
சிறப்பையும், அவள் கைகளையும்
செவ்வாயினையும், மயில் இறகின்
அடிபோன்ற பற்களையும் நான் கண்டு மகிழ்வதற்கு, முன் தெரியாத
விருந்து ஒன்று, மற்ற வாயில்களால் நீக்க முடியாத தலைவியின்
வெறுப்பினை நீக்கி அவளைப்
பழைய நிலையள் ஆக்குவதற்கு, நல்ல
மருந்தாக நான் மகிழுமாறு நமக்கு இன்று வாய்த்த நல்வினை
வியக்கத்தக்கது.]
அநுவாத முகத்தான், விருந்து ஒன்று வந்துழிப் பொறுத்தலும்
வரப்பெறும்.
விருந்துகண்டு பொறுத்தல்:
வண்தார் மகிழ்நன் வருவது
கேட்டு மலர்க்கண் அம்பு
கொண்டாள் புருவச் சிலைகுனித் தாள்குளிர் வெண்பனிசூழ்
வெண்டாமரைவியர்த்தாள் உயிர்த்தாள் நல்விருந்துஅயலே
கண்டாள் முகம்மலர்ந் தாள்புரந் தாள் அருங் கற்பினையே.
அம்பி. 491
எனவரும்.
[தலைவன் பரத்தையர் இல்லத்திலிருந்து மீண்டும் தன் மனை
வருகின்றான் என்பதனைக் கேட்டுக்
கோபத்தால் கண்களில் நீர் பெருக,
புருவங்களாகிய விற்கள் வளைய, முகம் வியர்த்து வெறுப்பினால்
வெண்தாமரை போல் வெளுக்கப் |