பருமூச்சுவிட்டதலைவி,
தலைவனுடைய பக்கலில் விருத்தினன்
வருதலைக்கண்டு, தன் கற்பைப் பாதுகாக்கும் கருத்தான்
வெறுப்பை
மறைத்து முகம் மலர்ந்தாள்.]
தலைமகள் விருந்துகண்டு ஒளித்த ஊடல்
பள்ளியிடத்து வெளிப்படத் தலைமகன் நோக்கிச்
சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்:
படர்ந்த கலாம்இன்னது என்றுஉரை யாமல் பயில்அமளி
கடந்த கலாபம் கலைபுறம் சூழக் கதம்தணியத்
தொடர்ந்துஅக லாத துணை அடித் தாமரை சூடுவல்இம்
மடந்தை கலாம்அக லாமலி நீர்கண்கள் மல்கினவே.
அம்பி. 494
எனவும் வரும்.
[இத்தலைவியின் கோபம் நீங்காததனால் இவள் கண்கள் நீர்
உகுக்கின்றன.
தனக்கு ஏற்பட்ட கோபம் இன்னது என்று கூறாமல்,
படுக்கையில்,
கலாபத்தோடு அணியப்பட்ட ஆடையால் தன்முதுகையும்
சேர்த்துப்
போர்த்திக்கொண்ட இவள் கோபம் நீங்குமாறு, இவளைத்
தொடர்ந்து இவள்
அடித்தாமரைகளைத் தலையால் வணங்கி இவள் ஊடல்
தீர்ப்பேன்.]
அநுவாத முகத்தான், ஒளித்த ஊடல் வெளிப்படலும் வரப்பெறும் ஒளித்த ஊடல் வெளிப்படல்:
திருத்திஅன் போடு திளைக்கின்ற
செவ்விச் செருக்குஇடையே
கருத்தில்அங்கு உற்ற கலாம் இங்கு அறிந்திலம் காதலியான்
ஒருத்திஎன்று உன்னை ஒருவன்என் றேஇருந் தேன்இனிநீ
இருத்திஎன் றேமொழி யாஇழிந் தாள்பள்ளி இன்ன
அம்பி. 493
எனவரும். |