[தலைவியின் ஆடை அணிகளை ஒப்பனை செய்து அவளைத்
துய்க்கும்
நேரத்தில் அப்பெருமிதத்தின்இடையே அவள் உள்ளத்துப் பட்ட
கோபம்
எனக்குப் புலனாகவில்லை. ‘இதுவரை உனக்குக் காதலி யான்
ஒருத்தியே உள்ளேன் என்று இருந்தேன்;
அந்நிலை மாறியதனால் இப்
படுக்கையில் நீயே இருப்பாயாக' என்று
கூறி, அவள் படுக்கையிலிருந்து
இறங்கினாள்.]
இஃது எங்கையர் காணின் நன்று
என்றல்:
தொடிவைத்த செங்கை அலவன்
உலாவும் துறைசெயத்தோர்
வடிவுஒத்த சிந்தை மலிபுனல் ஊர வணங்கியநின்
முடிவைத்த செங்கையும் மென்முலை ஆகம் முயங்கவந்துஎன்
அடிவைத்த செங்கையும் எங்கையர் காணின் அறவும்நன்றே.
அம்பி.455
எனவும்,
[செங்கையால் கவறாடும் போது வெற்றி பெற்றார் வடிவை ஒத்த
மகிழ்ந்த
சிந்தையை உடைய தலைவ! நீ வணங்குதற்கு உன் முடிமேல்
குவித்த உன்
கைகளையும், என் மார்பைத் தழுவவந்து என் அடிமேல்
வைத்து வணங்கிய
உன் கைகளையும் பரத்தையர் காணின் மிக
நன்றாயிருக்கும்!]
நின்னலது அங்கவர் யாரையும்
அறியேன் என்றல்:
மன்னும் புலவியை
மாற்றியும் தேற்றியும் வல்லவண்ணம்
இன்னம் தெளியிலை என்னைஎன் னேஎன்செய் கேன்இதற்கு
முன்னம் படிந்து முழுகுநன் னீர்க்கங்கை முன்துறைநீத்து
அன்னம் படியும்கொல் லோஉவர் ஆழியில் ஆர்அணங்கே.
அம்பி. 478
எனவும்,
[அணங்கே! உன்புலவியை மாற்றி உன்னைத் தெளிவிப்பதற்கு
வேண்டியன
யான் முயன்றும், நீ மன அமைதிஉற்றாய் |