அல்லை. இதற்கு யான் இனி
யாது செய்தல் வல்லேன்? கங்கையில் படிந்த
அன்னம் அதன்துறையை விடுத்து உப்புக்கரிக்கும் கடலில் படியுமா?]
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்:
ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர்உருட்டும்
மைஉறு வாள்கண் மழவைத் தழுவமற்று உன்மகனே
மெய்உற வாம்இதுஉன் இல்லே வருகஎன வெள்கிச்சென்றாள்
கைஉறு மான்மறி யோன்புலி யூர்அன்ன காரிகையே.
திரு. 391
எனவும்,
[கையிலே மான்குட்டியை ஏந்திய சிவபெருமானுடைய புலியூரை
ஒத்த பெண்
ஒருத்தி, உடல் அமைப்புக்கண்டு ‘உன்மகனோ?' என்று
ஐயுற்று, நம் வீட்டு
வாசலில் சிறுதேர் உருட்டும் நம் மகனைத் தழுவவே,
யான் அவளை
அணுகி ‘இவன் உன் மகனே; உனக்கு இங்கு உண்மையான
உறவு உண்டு;
இவ்வீடும் உனக்கு உரிய வீடுதான்' என்று கூறினேனாக,
அவள்
வெட்கிச்சென்றாள்.
தலைமகளைப் பாங்கி புலவி தணித்தல்:
உப்புஅமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(குறள். 1302)
எனவும் வரும்.
மாவா ரணம் அன்ன வாணன்தென் மாறைநம் மன்னன்நின்னைப்
பாவாய் பணியவும் பார்க்கிலை நீஇடப் பாகமங்கை
தாவாத சங்கரன் கங்கைதன் கொங்கை தழீஇஇதழிப்
பூவார் சடைமுடி மேல்வைத்த போதும் பொறுத்தனளே.
தஞ்சை. 401
என்பதும் அது.
85 |