674இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

     [உப்பு உணவிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே
இல்வாழ்க்கைக்குப் புலவி தேவைப்படும்; அப்புலவியைச் சிறிது நீட்டித்தல்
உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும் உப்பு அளவை மிகுப்பது போலும்.

      யானையை ஒத்த வாணனுடைய தென்மாறையிலுள்ள நின் கணவன்,
பாவாய்! உன்னை வணங்கவும், நீ அவனைப்பற்றி நினைக்கவில்லை.
இடப்பக்கம் தான் நீ்ங்காது இருந்த நிலையிலும், சிவபெருமான் கங்கையைத்
தழுவித் தன்தலைமேல் வைத்துக் கொண்டதனையும் பொறுத்தாள்அந்நங்கை
நல்லாள்!]

     அநுவாத முகத்தான், தலைவி புலவி தணியாள் ஆதலும் வரப்பெறும்.
 

தலைவி புலவி தணியாளாதல்:
 

பங்கயம் மல்லல் பழனநன் னாடும் பதியும்இல்லும்
எங்கையர் போல இனியம்அல் லோம்எங்கள் பால்தொடர்பு
செங்கயல் பாயக் கருங்கயம் மேவிய சேவல்அன்னம்
சங்கம் அதிலே திரிதண் புனல்ஊர தகுவதுஅன்றே.

அம்பி. 496

என வரும்.

      [செங்கயல் பாயவும், குளத்தில் பொருந்திய அன்னச்சேவல்

சங்குகளை இவர்ந்து திரியும் புனலூரா! நாடும் ஊரும் இல்லும்
பரத்தையரைப் போல நாங்கள் இனிமை உடையோம் அல்லோம் ஆதலின்,
சான்றோனாகியஉனக்கு எங்கள் தொடர்பு தகுவதன்று.]
 

தலைமகள் தணியாளாகத் தலைமகன் ஊடல்:
 

திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந்து இணைமலர்க் கண்ணின்இன் னோக்குஅருளிப்