பெருந்தேன் எனநெஞ்சு உகப்பிடித்து
ஆண்டநம் பெண்அமிர்தம்
வருந்தேல் அதுஅன்று இதுவோ வருவதுஒர் வஞ்சனையே
திரு. 394
எனவும்,
[திருத்தமில்லாத யானும் உய்யுமாறு சிற்றம்பலத்து ஆடிய
சிவபெருமானுடைய
பொதியமலையில், யான் உய்யுமாறு அருளோடு பார்த்து
என் நெஞ்சில்
அமுதுவார்த்து என்னைப் பிணித்து ஆட்கொண்ட நம்
பெண்அமிர்தம்
இவள் அல்லள். இவ்வுறு அவள் போல்வது ஒரு மாய
உருவாகும்.]
பாங்கி அன்பிலே கொடியை
என்று இணர்த்தார்
மார்பனை இகழ்தல்:
நெறியார் அலங்கல் மணிமுடி
யாய் என்றும் நின்னைஅன்றி
அறியா இவள்இங்கு அரியள்அன் றேமண்ணில் ஆரிடத்தும்
குறியாத அன்புடைக் கொம்புஅனை யாரைக் குறுகிஅந்தண்
முறியார் களப முலைமுகந்தோறும் முயல்கசென்றே.
அம்பி. 499
எனவும் வரும்.
[மாலை சூடிய மணி முடியாய்! என்றும் உன்னையன்றி வேற்றவரை
அறியாத
இவள் உனக்கு அரியவள்தான். உலகில் பொருள்மேல் அன்றி
அதனைக்
கொடுப்பார் யாரிடத்தும் அன்பைப் பிணித்து வைக்காத
பரத்தையரை
அணுகி அவர்களைத் தழுவுவதற்குச் சென்று முயல்வாயாக.]
அநுவாத முகத்தான், அன்பிலை கொடியை என்றலும் வரப்பெறும்.
அன்பிலை கொடியை என்றல்:
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேன்பூங் கட்டி என்றனிர் இனியே |