676இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

       பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
      தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
      வெய்ய உவர்க்கும் என்றனிர்
      ஐய அற்றால் அன்புஇல் பாலே.
                 குறுந். 196


எனவரும்.

      [ஐய! பண்டு என்தலைவி வேப்பங்காயைக் கொடுத்தாலும் அதனைக்
‘கருப்புக்கட்டி' என்று சுவைத்து உண்டனிர்! இப்பொழுது அவள் சற்று
மூத்தாளாக, தைத்திங்களில் பாரியின் பறம்புமலையின் இனிய குளிர்ந்த
நீரை அவள் பருகக் கொடுப்பினும், ‘உப்புக்கரித்துச் சுடுகின்றது' என்கின்றீர்!
அன்பு மாறிய திறம் அத்தன்மையாதாகிவிட்டடது!]

      ‘பிற' என்றதனால், மகப்பொறை கூர்ந்தவண்ணம் உரைத்தலும்,
தலைவன் புதல்வனைக் காண்டலும், பள்ளியின் அழுங்கலும், பரத்தையர்
காதல் பரத்தையைப் புகழ்ந்து தம்மை இகழ்தலும், தலைவி புனல்ஆடலும்,
பரத்தையரோடு புனலாடியது இல்லை' என்றவழி உரைத்தலும், பரத்தையைப்
பழித்தலும், காமக் கிழத்தி வாயில்வேண்டலும், பாங்கி வாயில்
நேர்வித்தலும், புதல்வன்வாயிலும், புதல்வற்புலத்தலும், மகற்கு

அறிவுறுத்தலும், மகப்பழித்து நெருங்கலும் வரப்பெறும். அவற்றுள்,

புதுப்புனல் வரவு உரைத்தல், பரத்தையரொடு தலைவன் புனலாடல், தலைவி
புதுப்புனலாடல், பரத்தையர் காதற்பரத்தையைப் புகழ்ந்து தம்மை இகழ்தல்

என்ற நான்கற்கும் பரத்தையைப் பழித்தற்கும் செய்யுள்
முன்னர்க்காட்டினாம். (நூற்பாக்கள்--62, 90, 103 இவற்றிலுள்ள
எடுத்துக்காட்டுப்பாடல்கள்)


மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல்:
 

      சீலம் தகைபெறு சாலிஅன் னாள்சிறு வன்தரித்த
     காலம் தமது கவின்நிறம் பெற்றன காலம் இன்னும்