கோலம் தரும்செங் குமுதமும்
நீலமும் குன்றுஎடுத்த
பாலன் துயில்கொண்ட பாயலும் காலைப் பதுமமுமே.
அம்பி. 461
எனவும்,
[நல்லொழுக்கத்தின் மிக்க அருந்ததி போன்ற தலைவி கருவுற்ற
காலத்தில்
அவள் உறுப்புக்கள் முழுஅழகையும் நிறத்தையும் பெற்றுவிட்டன.
அவள்
குமுதவாயும் நீலக்கண்களும், மகன் தங்கியிருக்கும் ஆலிலைவயிறும்,
அதனால் மகிழும் முகத்தாமரையும் இன்னும் நாளும் அழகுசிறக்கும்]
தலைவன் புதல்வனைக் காண்டல்:
ஆவும்கனகமும் அந்தணர்க்குஈந்து அங்கு அமரர்க்குஎல்லாம்
பூவும் புகையும் பொழிந்துஅவி ஏற்றிப் புதியபண்ணும்
பாவும் புனைந்து பரிசிலர் பாடப் பருவம்நன்று
யாவும் பெறஎடுத் தான்குடித் தோன்றலை ஏந்தலுமே.
அம்பி. 468
எனவும்,
[அந்தணருக்கு ஆவும் பொன்னும் தானமாக வழங்கித் தேவருக்குப்
பூவும்
புகையும் வழங்கி அவி உண்ணச்செய்து, புதிய புதிய பாடல்களைப்
பரிசில்
பெறும் பாவலர் பாட, நல்ல நேரத்தில் தலைவன்தன்குலத்தோன்றல்
ஆகிய
மகனைத் தன்கையில் எடுத்தான்.]
தலைவன் பள்ளியின் அழுங்கல்:
துணைஏதும் இன்றி நடுங்குநள்
போலும் துடிமருங்குல்
பிணையே மடநடைப் பெண்அமு தேஇன்பப் பேர்உததிப்
புணையேஅனையபொற் றோளும் தனமும்இப் பொங்குஅமளி
அணையே பொருந்த வரும்புற மோஎமக்கு ஆவதுஇன்றே.
அம்பி. 472
எனவும், |