678இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

      [தலைவி துணை எதுவும்இன்றி நடுங்கினாள்போலும். துடிபோன்ற

மருங்குலையும் மான்போன்ற பார்வையையும் உடைய மடநடைப் பெண்
அமுதின் இன்பப்பெருங்கடலின் தெப்பம் போன்ற தோள்களும் நகில்களும்
இச்சிறந்த படுக்கையில் கிடக்கும் எனக்குப் பயன்உறாமல் புறத்தே

இருக்கிறனவே. ]

பதங்கம் பழிச்சல்:
 

அறவோர் மொழிந்த அரிந்தமன் காத்த அகன்புறவுக்கு
உறவோ பதங்கம் விகங்கம் அன் றோஉத விக்குஉதவி
நறவுஓடு தண்புனல் நாடன்என் றேஎன்கண் நல்கியதால்
மறவோம் இதற்குஉள்ள வாசிஎந் நாளும் மடமயிலே.

அம்பி. 473

எனவும்,

      [மயிலே! சான்றோரால் போற்றப்படும் சிபி மன்னனின் மரபினன்

நான். அவன் உயிர்காத்த புறாவுக்குச் சிறகுகளை உடைய இவ்விளக்குப்
பூச்சி உறவுபோலும்! ‘உதவி செய்தார்க்குக் கைம்மாறு செய்யவேண்டும்'
என்று சிபியின் மரபினனாகிய தேனும் புனலும் ஓடும் நாடனாகிய என்கண்,
விளக்கை அணைத்துத் தலைவி என்னைப் புல்லுமாறு இப்பதங்கம் வாய்ப்பு
அளித்தது. இதற்கு உள்ள அன்பை யாம் என்றும் மறவோம்.]


காமக் கிழத்தி வாயில் வேண்டல்:


வெறுக்கத் தகுவன செய்யினும் ஊரன் விளங்குஇழைநீ
பொறுக்கத் தகாதஎம் போல்அலை யேவெம் புரவிஇன்றிச்
சிறுக்கைத்தலம்கொண்டுதேர்கடவா நின்றசிங்கம் பெற்றும்
கறுக்கத் தகுவதுஅன் றேசிவப்பு ஊரநின் கண்இணையே.

அம்பி 489

எனவும்,