[தலைவியே! தலைவன் வெறுக்கத்தக்க
செயல்களைச் செய்தாலும் நீ
பொறுக்கும் இயல்பற்ற எம்போன்ற காமக்கிழத்தி யல்லையே.
குதிரை
இன்றிச் சிறுகைகளால் நடைத்தேர் செலுத்தும் புதல்வற்பெற்ற குலமகளாகிய
நீ உன்
கண்கள் சிவப்ப வெகுளுதல் தக்கது அன்று.]
பாங்கி வாயில் நேர்வித்தல்:
பூவே அனையர் புரிகுழல்
பூவையர் பூவைஅயில்
மாவே அனையர் வரிகழல் காளையர் வாள்நெடுங்கண்
ஏவே அனையஇலங்குஇழையாய்நின்று இரங்கல்என்னே
நீவேய் அனைய நிரைவளைத் தோளி நிறம்பசந்தே.
அம்பி 500
எனவும்,
[அம்பனைய கண்களை உடைய தலைவீ! வேய்த்தோளாய்! மகளிர் பூக்களை
அனையர். ஆடவர் பூக்களில் தேன் உண்ணும் வண்டினை அனையர்.
இதனைத் தெரிந்து கொண்டும் நீ நிறம்பசந்து வருந்துவது ஏன்?]
புதல்வற் புலத்தல் :
மைவார் குழல்மட மங்கையர் தங்கள் வதுவைஉன்னிக்
கைவா ரணம்கட வும்பெரு மானைக் கலுழ்ந்து அழைத்துஉன்
செவ்வாய் அமுதால் அணிந்தசெஞ் சாந்தம் சிதையப்புல்லி
இவ்வாறு செய்ததுஎல் லாம்யாவர் மேல்இனி ஏறுவதே.
அம்பி. 503
எனவும்,
[பரத்தையரை வதுவை செய்யக்கருதி யானையைச் செலுத்திச்
சென்ற
உன்தந்தையை அழுது அழைத்து, உன்னைத்தூக்கிக்கொள்ளச்செய்து,
உன்வாய் எச்சிலால் உன் தந்தை அளித்த சந்தனம் சிதைய
அவனைப்புல்லி, இப்படி எல்லாம்
செய்த மகனே! உன் தந்தை இனி இங்கு
வாரான் ஆதலின்
இனி யாவர்மேல் நீ இவர்தல் கூடும்?] |