மகற்கு அறிவுறுத்தல்:
கொய்யும் சுவல்பரி யும்குலப் பாகும்முட் கோலும்இல்லா
வையம் கடவும் மழகளி றேவருந் தாமல்எங்கை
செய்யும் பெருந்தவ மேகலந் தாருழைத் தீமையும்அப்
பொய்யும்கல் லாதுஒழி வாய்புனல் ஊரனைப் போலஇன்றே.
அம்பி. 504
எனவும்,
[குதிரையும் பாகனும் தாற்றுக்கோலும் இல்லாத நடைத்தேரைச்
செலுத்தும் இளங்களிறுபோன்ற என்மகனே! வருந்தாமல் என் தங்கையர்
செய்த பெரிய
தவமே வடிவு எடுத்தாற்போன்று அவரிடத்தும்
அன்புகாட்டும் புதல்வனே!
உன்தந்தையைப்போலத் தன்னைச்
சேர்ந்தவருக்குத் தீங்கு செய்வதனையும்,
அவர்களிடம் பொய்
உரைப்பதனையும் கற்காமல், அவனுடைய நல்ல
பண்புகளையே
பின்பற்றுவாயாக]
மகற்பழித்து நெருங்கல்:
வலத்துஇயல் சூல மதுரேசர் கோயில் வலம்செயப்போய்ச்
சலத்துஇயல் செய்து வரும்களி றேவிலை சாற்றிவிற்கும்
நலத்தியர் சேரிக்கு நல்விருந் தாவது நாளும்உங்கள்
குலத்துஇயல்பாய்இருந்தால்உன்னையோ நொந்துகூறுவதே.
மதுரை 349
எனவும் வரும். பிறவும்அன்ன.
183
[வெற்றிதரும் சூலத்தை ஏந்திய சொக்கநாதர் கோயிலை
வலம்செய்துவரப்
போய், இடையே பரத்தையர்களைக் கண்டு வஞ்சனை
செய்துவரும் மகனே!
உடலை விலைக்கு விற்கும் பரத்தையர் சேரிக்கு நல்ல
விருந்தினராய்ப்
போய்சேருவது உங்கள் குலத்தாருக்கே நாளும்
இயல்பாகிவிட்டது. உன்னை
நொந்து கூறுவதில் பயன் என்ன? உன்தந்தை
இப்பருவத்தில் பரத்தையர்
சேரிக்குப் போகவும், நீ குழந்தைப்
பருவத்திலேயே அங்குச்
செல்லத்தொடங்கிவிட்டாய்!]
183 |