அகத்திணையியல்--நூற்பா எண் 184681

உணர்த்த உணரா ஊடலின் ஒழிபு


556     ஆயிழை மைந்தனும் ஆஅற் றாமையும்
        வாயி லாக வரவுஎதிர் கோடலும்1
        மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு
        இணங்கின மைந்தனை இனிதினின் புகழ்தலும்2
        தலைவனைப் புகழ்தலும்3 சிலைநுதல் பாங்கி
        மனைவியைப் புகழ்தலும்4 இனையன பிறவும்
        அனைவகை மொழிந்த அதன்பால் படுமே.

     இஃது உணர்த்த உணரா ஊடற்கு உரிய ஒழிபு கூறுகின்றது.

     (இ-ள்) ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன்
வந்துழித் தலைமகள் எதிர்கோடல் முதலாகப் பாங்கி மனைவியைப் புகழ்தல்
ஈறாகச் சொல்லப்பட்டனவும் பிறவும் அத்தன்மைத்தாகிய உணர்த்த உணரா
ஊடற்கு உரியவாம் என்றவாறு.

      இவற்றை வேறு கூறியது, அவை போலாத ஊடல் சிறுபான்மை

நோக்கி என்க.

விளக்கம்
 

1   மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வந்த தலைவனை எதிர்கோடல்

.
2   தலைவன் நீக்கத்துக்கண் வந்த தோழியோடு தலைவனைப் புகழ்தல்.


3   தலைவனைத் தலைவி புகழ்தல்.


4   தோழி தலைவியைப் புகழ்தல்.
86