682இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

          முழுதும்--                                    ந. அ, 207
 

     ‘அரிவை மைந்தனும் ஆற்றா மையுமே
     வாயி லாக வரவுஎதிர் கோடலும்
     புணர்ந்தவன் போயபின் புனைஇழை இகுளையோடு
     அணங்குதன் மைந்தனை அன்புறப் புகழ்தலும்
     துணைவனைப் புகழ்தலும் தூநகைப் பாங்கி
     துணைவியைப் புகழ்ந்து சொல்லலும் அதன்பின்
     மதுப்பொழி தாரோன் மணமனை வாயில்
     பொதுத்தலத்து இருந்துழிப் புரைதீர் மனைவியர்
     நினைவுஅறி கண்புதை நிகழ்தலும் பிறவும்
     உணர்வதோடு உணரா ஊடல்கள் உட்கொளும்'.


மா. அ. 104]

 

மகனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன் வந்துழித்
தலைமகள் எதிர்கோடல்:

 

வெள்ளம் பரந்தன்ன வேட்கைசென்றாலும் மிகப்பெரியோர்
உள்ளம் சிறியவர் மேல்செல்லு மோஒளி கோமளம்சேர்
வள்ளம் கமல மலர்த்தஞ்சை வாணன்தென் மாறைஅன்னப்
புள்ளம் புனல்வயல் ஊரபுன் காமம் புகல்வதன்றே.

தஞ்சை. 404


எனவும்
,

     [ஒளியும் வனப்பும் பொருந்திய கிண்ணம் போன்ற தாமரைமலர்கள்
பூக்கும் வாணனுடைய தென்மாறையைப் போன்ற, அன்னங்கள் தங்கும்
வளம் சான்ற வயல் ஊரனே! புல்லிய காமம் விரும்பத்தக்கதன்று. வெள்ளம்
பரவினால் போன்ற வேட்கை தோன்றினாலும், சான்றோர் உள்ளம்
சிறியவரிடம படர்ந்து செல்லுமோ?]